Skip to main content

Annaiyin Karuvil Kalaiyaamal Song Lyrics From Haridas

 அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே

அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே

கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு

மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு

கனவுகள் காணு தூக்கம் கொன்று

நடந்திடும் என்று நம்பி இன்று


விதைக்குள் தூங்கும் ஆல மரம்

கண்ணுக்குத் தெரியாது

அது மரமாய் வளரும் காலம் வரும்

மண்ணுக்கும் உறங்காது


நீ தேடும் சிகரம் தூரம் இல்லை

நடப்பதை நிறுத்தாதே

வெறும் துளி தான் இங்கே கடலாகும்

நம்பிக்கை தொலைக்காதே


மீண்டும் மீண்டும் பாதம் பட்டால்

பாறை கூட பாதை ஆகும்

முன்னால் வைத்த காலை நீயும்

பின்னால் எடுக்காதே


பூக்கள் பூக்க வேர்கள் தேவை

வெற்றிக்கிங்கே வேண்டும் வேர்வை

உன் கை ரேகை தேய்ந்தா போகும்

உழைப்பதை நிறுத்தாதே…(அன்னையின்)


உன்னால் என்ன முடியும் என்று

உனக்கே தெரியாது

உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்

சாதிக்க தடை ஏது


முயற்சிகள் செய்து தோற்பதெல்லாம்

தோல்விகள் கிடையாது

விழுந்து விடாமல் யாரும் இங்கே

எழுந்தது கிடையாது


இல்லை என்ற சொல்லை கூட

இல்லை என்று தூக்கிப் போடு

நாளை உன்னை மேலே ஏற்றும்

துணிச்சலை இழக்காதே


வீழ்ந்தால் கூட பந்தாய் மாறு

வேகம் கொண்டு மேலே ஏறு

முந்திக் கொண்டு முன்னால் ஓடு

முயற்சியை நிறுத்தாதே


அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே

அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே

கஷ்டங்களை தாங்கு வெற்றி உண்டு

மேடும் பள்ளம் தானே வாழ்க்கை இங்கு

கனவுகள் காணு தூக்கம் கொன்று

நடந்திடும் என்று நம்பி இன்று....

Comments

Popular posts from this blog

Devathaiyai Kanden Song Lyrics From Kaadhal Kondein

 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள் ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது  அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது தீக்குள்ளே விரல் வைத்தேன்  தனி தீவில் கடை வைத்தேன்  மணல் வீடு கட்டி வைத்தேன்  தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள் நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்  தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை  தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி  அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்  அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்  அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்  கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே தேவதையை கண்டேன் காதலில் விழுந்த...

Thalli Pogathey Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

 ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஏனோ வானிலை மாறுதே  மணித்துளி போகுதே  மார்பின் வேகம் கூடுதே  மனமோ மையல் கொண்டு வார்த்தை தேடுதே  கண்ணெல்லாம்..  நீயேதான்..  நிற்கின்றாய்..  விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..  இமை மூடிடு என்றேன்..  நகரும்  நொடிகள்  கசையடிப் போலே  முதுகின் மேலே  விழுவதினாலே  வரி வரிக் கவிதை..  எழுதும் வலிகள்  எழுதா மொழிகள்  எனது.. !!  கடல் போல பெரிதாக நீ நின்றாய்..  சிறுவன் நான்  சிறு அலை மட்டும் தான்  பார்க்கிறேன்.. பார்க்கிறேன்.. எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று  ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்  ஓசைகள் இல்லாத இரவே..  ஓ.. நான் மட்டும் தூங்காமல்  ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..  கலாபம்  போலாடும்  கனவில் வாழ்கின்றனே..  கை நீட்டி  உன்னைத் தீண்டவே பார்த்தேன்..  ஏன் அதில் தோற்றேன்.?  ஏன் முதல் முத்தம்  தர தாமதம் ஆகுது.?  தாமரை வேகுது..! ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..  ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ...

Nenje Ezhu Song Lyrics From Maryan via Mariyaan

ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல், இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை... ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை...